வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அட்டகாசமான சுவை கொண்ட கோதுமை பாயசம் செய்யாலாம்!
கோதுமை மாவு பலருக்கு அதிகமாக பிடிக்காது, காரணம் அதில் நாம் அடிக்கடி சப்பாத்தி மற்றும் தோசை தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், தற்போது அந்த கோதுமை மாவையே வைத்து எப்படி சுவையான பாயசம் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- கோதுமை ரவை பருவத்தில் அரைத்து
- நாட்டு சர்க்கரை
- பால்
- முந்திரி
- நெய்
- ஏலக்காய்
- கேசரிபாவுடர்
- பச்சை கற்பூரம்
செய்முறை
ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வருது எடுக்கவும், பின்பு அந்த சட்டியில் கோதுமை மாவை போட்டு வறுக்கவும். நன்கு வருந்தும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அதன் பின்பு ஒரு சட்டியில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும், நீர் கொதித்ததும், வறுத்து வைத்துள்ள கோதுமையை போட்டு கிளறவும். அதன் பின்பு அதில் பாலை ஊற்றி கிளறவும். இரண்டு கொத்தி வந்ததும் அதனுள் நாட்டு சர்க்கரையை சேர்க்கவும்.
அதன் பின்பு கற்பூரத்தை ஒடித்து போட்டுவிட்டு, வாசனைக்காக ஏலக்காயை சேர்க்கவும். ஒரு கொத்தி விட்டு இறக்கினால் அட்டகாசமான சுவை கொண்ட கோதுமை பாயசம் தயார்.