ஸ்ட்ராபெரியில் இவ்வளவு ஸ்பெஷல் குணங்கள் உள்ளதா!
இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வராம் என்றால் அதில் ஒன்று பழங்கள். அதிலும் ஸ்ட்ராபெர்ரி பழம் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி ஆகவும் வாய்க்கு சுவையாகவும் இருக்க கூடிய ஒன்று. இந்த பழத்தில் இருக்கக் கூடிய மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறியலாம் வாருங்கள்.
ஸ்ட்ராபெரியின் நன்மைகள்
ஸ்ட்ராபெரி பழத்தில் அதிக அளவு வைட்டமின் b6 மற்றும் அயோடின் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செலினியம் மற்றும் ஆர்ஜினின் போன்ற சில மூலப்பொருட்களும் இந்த பழத்தில் காணப்படுகிறது. இந்த பழத்தில் தோல் வறட்சியை நீக்க கூடிய மிகச் சிறந்த நீர்ச்சத்து காணப்படுகிறது. இதை தொடர்ச்சியாக உண்ணும் பொழுது வறண்ட சருமம் உடையவர்களுக்கு பளபளப்பான சருமம் கிடைக்கும். இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கிறது, சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் ஏற்படக்கூடிய நீரழிவை தடுக்க இந்த பழம் பெரிதும் பயன்படுகிறது.
புற்று நோயை உருவாக்கக் கூடிய பிரீரேடிக்கல்களை உடலில் ஏற்படாமல் இது தடுக்கிறது. ரத்த குழாய்களில் ஏற்படக்கூடிய அடைப்புகளை நீக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பழத்தில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, செம்பு ஆகிய பொருட்களும் உள்ளது. இத்தன்மை காரணமாக நாமும் தொடர்ந்து இப்பழத்தை சாப்பிடும் பொழுது அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் உடலுக்கு தேவையான கலோரிகளும் நமக்கு கிடைக்கிறது.
இந்த பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது மட்டுமல்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட கூடிய அழகுசாதன பொருட்களுக்கும் முக்கிய காரணியாக பயன்படுகிறது. முக வறட்சியை போக்கி பளபளப்பாக மாற்றும், முகத்தில் காணப்படக்கூடிய பருக்களின் வடுக்களை மாற்றக்கூடிய தன்மை கொண்டது.