இன்றைய இசை வெளியிட்டு விழாவில் இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கிறதா !ரசிகர்களே கொண்டாட தயாரா !
நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக “பிகில் “படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் “வெறித்தனம்” எனும் பாடலையும் பாடியுள்ளார்.
இதையடுத்து இந்த படம் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த பாடல் பல சாதனைகளையும் படைத்தது.இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் இன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்றைய இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் வெறித்தனம் பாடலை பாட இருப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.