கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் இப்படி ஒரு ஆபத்தா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் அதிகரிக்கும்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், தி லான்செட் குளோபல் ஹெல்த் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கொரோனா வைரஸ் பரவலால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் முறையே 10, 20 மற்றும் 36 சதவீதம் வரை அதிகரிப்பதைக் காணலாம் என்றும், சுகாதார சேவைகளில் தாக்கம் ஏற்படும் என்றும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.