ஏலக்காயிலும் இவ்வளவு மருத்துவக்குணங்களா? அறிவோம் வாருங்கள்!
தென்னிந்திய உணவுகளில் ஒன்றான ஏலக்காய் நாம் வாசனைக்காக பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். இந்த ஏலக்காயை பாயாசம், பிரியாணி, கறி குழம்பு என பல உணவுகளில் வாசனைக்காக தான் சேர்த்துக் கொள்வோம். ஆனால் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. இதன் பிறப்பிடமாகிய இந்தியாவில் இந்த ஏலக்காய் வாசனை திரவியங்களின் ராணியாக திகழ்கிறது. இதில் பல இயற்கையான மூலிகை தன்மைக் கொண்ட மருத்துவ குணங்களும் உள்ளன, அவற்றைப் பார்ப்போம்.
ஏலக்காயன் மருத்துவ குணங்கள்
ஏலக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது சிறுநீரக மண்டலங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதிகப்படியான உப்பு நீர் மற்றும் கிருமிகளை வெளியேற்றி சிறுநீரக மண்டலத்தினை சுத்தமாக வைத்திருப்பதற்கு உதவுகிறது.
ஜலதோசம், மூக்கடைப்பு ஆகியவற்றால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நெருப்பில் போட்டு அந்தப் புகையை சுவாசிக்க கொடுக்கும்பொழுது மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஏலக்காய் தேநீர் குடிக்கும் பொழுது மன அழுத்தத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என மருத்துவத் துறையே நிரூபித்துள்ளது.
மேலும் புற்றுநோய் செல்களை உடலில் உருவாக விடாமல் தடுக்கும். ரத்தம் உறைதலை தடுத்து அஜீரணக் கோளாறுகள் மலச்சிக்கல் ஆகியவற்றை நீக்குகிறது. மேலும் தலைசுற்றல் வெயிலில் ஏற்படுவதால் வரும் மயக்கம் ஆகியவற்றிற்கு ஏலக்காய் கசாயம் போட்டு குடித்தால் மிகவும் நல்லது.
வாயு தொல்லை நீங்க உதவி செய்கிறது, தொடர்ச்சியான விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி அதனுடன் புதினா இலைகள் சேர்த்து நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் விக்கல் நின்றுவிடும். இவ்வாறு எக்கச்சக்கமான பலனுள்ள இந்த ஏலக்காயை இனியும் வாசனைக்கு என்று மட்டும் கருதாமல் நமது வாழ்க்கையின் முக்கியமான ஒரு உணவாக சேர்த்துக் கொள்ளும் பொழுது நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.