விளக்கில் ஊற்றி வைத்த எண்ணெய் மீதமாகிறதா? அதனை என்ன செய்ய வேண்டும்?

Default Image

விளக்கில் ஊற்றி வைத்த எண்ணெய் மீதமானால் அதனை என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றுவது நடைமுறையான செயல். அப்படி தீபம் ஏற்றும் பொழுது கடைபிடிக்க வேண்டியவைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் ஏற்றும் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏற்றுவது சகல சௌபாக்கியங்களும் வீட்டிற்கு வந்து சேரும். கோவிலில் ஏற்றும் விளக்கில் பஞ்ச தீப எண்ணெய் உபயோகிக்கலாம். மேலும், வீட்டில் இருக்கும் விளக்கில் ஒரு எண்ணெய் உடன் மற்றொரு எண்ணெய் சேர்த்து பயன்படுத்த கூடாது. தினமும் பூஜை அறையில் உள்ள பிரதான விளக்கான காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றும் பொழுது நேரடியாக தீப்பெட்டி கொண்டு அதனை ஏற்ற கூடாது.

ஒரு தீபத்தை கொண்டு தான் பிரதான விளக்கை ஏற்ற வேண்டும். அதற்கு முதலில் ஏதேனும் அகல் அல்லது சிறு விளக்கில் தீபம் ஏற்றி விட்டு அந்த விளக்கை வைத்து பிரதான விளக்கை ஏற்ற வேண்டும். ஏற்றும் பொழுது விளக்கில் உள்ள திரியை நன்கு மேல்நோக்கி முறுக்கி வைத்தால் தீபம் நன்கு எரியும். மேலும் இதனால் எண்ணெய்யும் பச்சை நிறத்திற்கு மாறாது, திரியும் கருப்பாக மாறாது. முக்கியமாக விளக்கில் உள்ள எண்ணெய் பச்சை நிறத்திற்கு மாறக்கூடாது. அதற்கு முன்னரே விளக்கை நன்கு துலக்கி புது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

சிலர் அந்த பழைய எண்ணெய்யை எடுத்து வைத்து அதனையே மீண்டும் பயன்படுத்துவர். அவ்வாறு செய்வது தவறான செயல். சரி, பின்னர் இந்த பழைய எண்ணெய்யை எதற்கு பயன்படுத்தலாம் என்றால் வீட்டில் உள்ள கதவு, தாழ்ப்பாள் அல்லது இரும்பு சார்ந்த பொருளுக்கு அந்த எண்ணெய்யை துருப்பிடிக்காமல் இருக்க பயன்படுத்தி கொள்ளலாம். இரும்பு பொருட்களில் சனீஸ்வர பகவான் நிறைந்திருப்பதால் இந்த எண்ணெய்யை இதற்கு நீங்கள் பயன்படுத்துவதால் நன்மையே நிகழும்.

அல்லது அந்த பழைய எண்ணெய்யை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஏதேனும் பாதுகாப்பான இடத்தில் ஊற்றலாம். ஆனால் உங்களது வீட்டில் எந்த இடத்திலும் அதனை ஊற்ற கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும், விளக்கின் தீபம் தானாக துடிதுடித்து அணைய விடக்கூடாது. காற்றினாலோ அல்லது ஊதியோ அதனை அணைக்க கூடாது. விளக்கை மலையேற்றுவதற்கு மலரை பயன்படுத்த வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்