நாம் பொதுவாகவே கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் பொதுவாகவே கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையானபொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொண்டைக்கடலையை நீங்கள் இந்த ரெசிபி செய்வதற்கு முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் ஊற வைத்த கொண்டைக்கடலையை மிக்சியில் போட்டு, அதனுள் சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, பச்சை மிளகாய் ஒன்று, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக அதை தனியாக ஒரு பௌலில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் மீண்டும் ஒரு பெளவுலில் அரிசி மாவு அரை கப் எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்.
இந்த மாவை கொண்டை கடலை கலவையில் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பில் தோசை சுடும் பாத்திரத்தை வைத்து, அதனுள் தோசை ஊற்றி தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தோசை நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை வழங்குவதோடு, வித்தியாசமான முறையில், நம் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கும்போது அது அவர்களுக்கு பிடித்தமானதாகும். இந்த தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, பூண்டு சட்னி என எதை வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக காணப்படும். இப்போது கொண்டைக்கடலை தோசை தயார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…