உங்கள் வீட்டிலும் கரப்பான் பூச்சி தொல்லை உள்ளதா…? இதை ஒழிப்பதற்கான வழிமுறை அறியலாம் வாருங்கள்!

Default Image

பெரும்பாலும் அனைவரும் வீட்டிலேயே கரப்பான் பூச்சி தொல்லை இருப்பது வழக்கம் தான். குறிப்பாக சமையலறை, குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இவை காணப்படும். மேலும் சிலர் இந்த கரப்பான் பூச்சிகள் கண்டு பயப்படவும் செய்வார்கள்.

இந்த பூச்சிகள் காரணமாக நமது உடல் நலமும் பாதிக்கப்படும். உங்கள் வீட்டிலும் இந்த கரப்பான் பூச்சி தொல்லை அதிக அளவில் இருந்தால், தீங்கு விளைவிக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தாமல் எப்படி இந்த கரப்பான் பூச்சியை ஒழிப்பது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பேக்கிங் சோடா

குளியலறை மற்றும் சமையலறைகளில் உள்ள கரப்பான் பூச்சிகளை போக்குவதற்கு பேக்கிங் சோடா பெரிதும் பயன்படுகிறது. பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சி அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் லேசாகத் தூவி விடவும். இதன் அடர்த்தியான வாசனை காரணமாக கரப்பான்பூச்சிகள் வீட்டிற்குள் நுழைய முடியாது.

வடிகாலில் கரப்பான் பூச்சிகள் இருப்பதாக உணர்ந்தால் இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கரைத்து இந்த கலவையை வடிகாலில் வைத்து விடவும். இதனால் அப்பகுதியில் உள்ள கரப்பான்கள் இறந்து விடும்.

போரிக் அமிலம்

போரிக் அமிலத்தின் உதவியுடன் நீங்கள் கரப்பான் பூச்சியை ஒழிக்க முடியும். சமையலறையின் மறைவான பகுதிகள் மற்றும் குளியலறையின் வடிகால் பகுதிகளில் இதனை வைத்தால் கரப்பான் பூச்சி ஒழிந்து விடும்.

வினிகர்

கரப்பான் பூச்சிகளை வீட்டிலிருந்து அகற்ற வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். சம அளவு வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கரப்பான் பூச்சி உள்ள பகுதிகளில் தெளிக்கவும். கரப்பான் பூச்சிகள் வினிகரில் வாசனை காரணமாக இறந்து விடும்.

சுடு தண்ணீர்

உங்கள் சமையலறை மற்றும் குளியலறை பகுதியிலுள்ள வடிகால்களில் கொதிக்கும் நீரை ஊற்றினால் அப்பகுதியிலுள்ள கரப்பான் பூச்சி இறந்துவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
TVK Vijay - BJP Senior Leader H Raja
tvk vijay
Union minister Piyush goyal say about StartUps
Vijay gets Y category security
Indian Astronaut Shubhanshu Shukla
BJP State President K Annamalai