கொரோனா தொற்றுக்கு பின் உலக பொருளாதாரம் முன்னேறியுள்ளதா…?

Published by
லீனா

பொருளாதாரம் என்றால் என்ன? 

பொருளாதாரம் என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளை கொண்டுள்ளது. நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய மாறுநிலைக் கூறுகளாக கருதப்படுகிறது.

கொரோனாவின் கோர தாண்டவம் : 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு நாட்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்தக் கொரோனா பரவலால் பல நாடுகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவிவரும் நிலையில்,  பல நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் 

கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஒவ்வொரு நாடுகளிலும் ஏற்றுமதி இறக்குமதி சேவைகள் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து சேவைகளான விமான போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் பல நாடுகள் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பின்னடைவை சந்தித்தது. அவ்வப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாடுகளும் ஈடுபட்டு  வருகிறது.

வேலையிழப்பு 

ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தொழில்துறைகள் முடக்கப்பட்ட நிலையில், தொழில்துறை நிறுவனங்கள், மக்களுக்கு வேலை வழங்கி வந்த நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், மக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.  இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடக்கப்பட்டது.  உண்பதற்கு கூட வழி இல்லாத அளவிற்கு பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்தை சந்தித்தனர்.

இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் பலர் தங்களது வேலையை  இழந்தனர். இந்த வேலை இழப்பு, வறுமை காரணமாக மன உளைச்சலில் பலர்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

உலக பொருளாதாரம் குறித்து ஐ.நா-வின் கணிப்பு 

கடந்த 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலக பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகளாக அளவிற்கு 5.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெற்றது. ஆனால் அதே ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உலக பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிய தொடங்கியது. சீனா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற மிகப்பெரிய வல்லரசு நாடுகளும் கூட பொருளாதார ரீதியாக கடும் சரிவை சந்தித்தன.

இந்நிலையில் 2022 – 2023 ஆம் ஆண்டுகளிலும் உலக பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்றும், 2022-ல் உலக பொருளாதார வளர்ச்சி வீதம் 4 சதவிகித அளவிலும், 2023-ல்  3.5 சதவிகித அளவிலும் இருக்கும் என ஐ.நா கணித்துள்ளது.

Recent Posts

live : தவெக முதல் பொதுக்குழு கூட்டம் முதல்…10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரை!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…

18 minutes ago

விக்ரமின் வீர தீர சூரன் தரமான ‘சம்பவம்’.! பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ…

சென்னை : 'சீயான்' விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம்…

44 minutes ago

பாஸ் இருந்த உள்ளே., இல்லைனா வெளியே! தவெக முதல் பொதுக்குழுவில் ‘கறார்’!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…

2 hours ago

SRH-க்கு ‘ஷாக்’ கொடுத்த தாக்கூர்! லக்னோ முதல் வெற்றியை ருசித்தது எப்படி?

ஹைதராபாத் :  ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…

2 hours ago

காலில் விழுவதற்கு சம்பளம் கொடுத்தாரா ரியான் பராக்? கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…

16 hours ago

கொல்கத்தா ஹைதராபாத் இல்லை…இந்த 4 அணிகள் தான் பிளேஆஃப் போகும்…அடிச்சு சொல்லும் இர்ஃபான் பதான்!

சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த  4 அணிகள் பிளேஆஃப்…

16 hours ago