பழங்கள் என்றால் நாம் அனைவரும் அன்றாடம் விரும்பி உண்ணும் ஒரு உணவு தான். அதிலும் குறிப்பாக சில பழங்களை நமக்கு விருப்பமாக தேர்ந்தெடுத்து உண்பது அனைவருக்கும் வழக்கம். அதிலும் ஆரஞ்சு பழம் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கவா செய்வார்கள்.
இந்த பழத்தில் பல நன்மைகள் உள்ளது. சிலர் பழத்தின் நன்மை தீமை அறியாமலே உண்கிறார்கள். அனைத்து பழங்களிலும் பொதுவாகவே ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சாது நிறைந்து காணப்படும். அதிலும் ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது, இதனால் உடலில் பிரீ ராடிக்கல் செல் அழிவு மற்றும் ஆக்ஸிடேஷன் ஏற்படாமல் காப்பதோடு மட்டுமல்லாமல், உங்களை இளமையாக வைக்க உதவும்.
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். இந்த பழத்திலுள்ள அதிக அளவு நார்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது.பழத்தில் மட்டுமல்ல இதன் விதையிலும் அளவற்ற சத்துக்கள் உள்ளது.
ஆரஞ்சு பழத்தில் விதைகளில் சிறந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. எனவே, இதனை சாப்பிடுவதால் புத்துணர்ச்சி அளிக்கிறது. இந்த விதைகள் உடல் சோர்வை போக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவும் .மேலும் இந்த விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் முடிக்கு ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும் .மேலும் முடியின் வலிமையை அதிகரிப்பதோடு, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது .
இது தலையில் ரத்த ஓட்டம் சீராக செயல்படவும் உதவுகிறது . மேலும், இந்த விதையில், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ளதால் உடலில் நச்சுத்தன்மையை சரி செய்கிறது.
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…