பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்து, தனது காதல் மனைவியுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாதாரணமான நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராகவும், இந்திய அளவில் இயக்குனராகவும் பிரபலமான நடன கலைஞராகவும் வலம் வரக்கூடிய நடிகர் தான் பிரபுதேவா. இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ரமலத் என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்களும் உள்ளனர். அவரது மூத்த மகன் கடந்த 2008ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார், அதன்பின் விஜய் உடன் நயன்தாரா வில்லு படத்தில் நடித்தபோது அந்த படத்தை பிரபுதேவா தான் இயக்கினார். அப்பொழுது நயன்தாராவுடன் அவருக்கு காதல் மலர்ந்ததால் தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்து கொண்டார்.
அதன் பின் நயன்தாராவுடன் சேர்ந்து வெளியில் எல்லாம் சென்று வந்தார். மேலும் இருவரும் காதலிப்பதும் சமூக வலைதளங்கள் மற்றும் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இவருக்காக நயன்தாரா மதம் மாறி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாலும் சில காரணங்களால் இவர்களின் காதல் முறிந்து திருமணம் நடைபெறவில்லை. இவர்களுடைய காதலும் கடந்த 2012 ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது. அதன் பின் பிரபுதேவா மிகவும் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்துள்ளார்.
அப்பொழுது அவருக்கு பிசியோதெரபி டாக்டர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபுதேவா அந்த பிசியோதெரபி டாக்டரை ரகசியமாக குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் இருவரும் வசித்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகறித்து பிரபுதேவாவிடம் கேட்கும் பொழுது அவர் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை, அதை ஒப்புக் கொள்ளவுமில்லை உண்மை என்ன என்பது குறித்து அவர் தான் சொல்ல வேண்டும்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…