மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா? இதோ ஆதாரம்!
- மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா?
- ஆதாரத்துடன் வெளியிட்ட நெட்டிசன்கள்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த போஸ்டரில், விஜய் கருப்பு நிற உடையில், அமைதியாக இருக்குமாறு சொல்லுவது போல உள்ளது.
இந்நிலையில், இந்த போஸ்டர், பல மொழி படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் கூறுகின்றனர். மேலும் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளனர்.