சாதம் மீதமாகி விட்டதா…? கவலைய விடுங்க, சாதத்தை வைத்து தோசை செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

இரவு நேரத்தில் பெரும்பாலும் பலர் வீட்டில் சாதம் மீதமாக இருப்பது வழக்கம் தான். ஆனால் சிலருக்கு குளிர்ந்த சாதத்தை சாப்பிடுவது பிடிக்காது. எனவே தேவையில்லாமல் அதை கொட்ட வேண்டிய நிலை ஏற்படும். இருந்தாலும் சாதத்தை கொட்டி விட்டோமே என்ற கவலையும் பலருக்கு இருக்கும். இனிமேல் சாதத்தை தயவுசெய்து வீணாக்காதீர்கள். இந்த பழைய சாதத்தை வைத்து எப்படி அட்டகாசமான சுவையில் தோசை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • பழைய சாதம்
  • வெங்காயம்
  • உருளைக்கிழங்கு
  • தக்காளி
  • சீரகத்தூள்
  • கொத்தமல்லி
  • மிளகு தூள்
  • மிளகாய் தூள்
  • கடுகு
  • உளுந்தம் பருப்பு
  • பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • வெங்காயம்
  • கேரட்
  • உப்பு

செய்முறை

அரைக்க : முதலில் பழைய சாதம் 2 கப் அளவு எடுத்து, அதை மிக்சியில் சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் தோல் நீக்கிய உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தாளிப்பு : கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

மாவுக் கலவை : நாம் அரைத்து எடுத்து வைத்துள்ள மாவுடன் சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து, பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு நாம் தாளித்து வைத்துள்ளதை இந்த மாவில் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.

தோசை : இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடேறியதும் தோசை மாவை ஊற்றி கொள்ளவும். பின்பு மாவின் மீது பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் கேரட் ஆகியவற்றைத் தூவி பொன்னிறமாக இருபுறமும் வரும் வரை சுட்டு எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் அட்டகாசமான பழைய சாதம் தோசை தயார்.

நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள். இது பழைய சாதத்தில் செய்தது என்பது கூட தெரியாத அளவிற்கு அட்டகாசமான சுவையுடன் இருக்கும்.

Published by
Rebekal

Recent Posts

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

25 minutes ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

3 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

3 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

4 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

4 hours ago

ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…

4 hours ago