பனிக்காலத்தில் முகம் வறண்டு போகிறதா? பளபளப்பான அழகிய முகம் பெற இத பண்ணுங்க..!

Default Image

பனிக்காலத்தில் வறண்ட முகத்திலிருந்து பளபளப்பான அழகிய முகம் பெற இத இனி செய்யுங்கள்.

குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்கும் முக்கிய பாதிப்பு வறட்சி தன்மை. வறட்சி தன்மையால் முகம் மட்டுமல்லாது கை, கால் என உடல் முழுவதும் வறட்சி தன்மையால் அவதிப்படும். முக வறட்சி காரணமாக வெளியே செல்ல அதிகமாக தயக்கம் ஏற்படும். இதிலிருந்து விடுபட்டு முகம் பளபளப்பான அழகான முகம் பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய சில குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.

தேன் மற்றும் முட்டை மஞ்சள் கரு: ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு முட்டையின் மஞ்சள் கரு, 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கொள்ளுங்கள். இதை ஒரு பேஸ்ட் போல தயார் செய்து, அதை முகம் மற்றும் சருமம் அதிகம் வறட்சி அடையும் பகுதிகளில் தடவி 20 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

முட்டை மஞ்சள் கரு, தேன் மற்றும் தயிர்: சிலருக்கு எண்ணெய் பசையாக முகம் இருக்கும். இதனால் முகப்பரு அதிகமாக ஏற்படும். இது போன்ற எண்ணெய் பசை உடைய சருமத்தினர் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் அரை டீஸ்பூன் தேன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கொள்ளுங்கள். இதனோடு சிறிதளவு முல்தானி மெட்டி பொடி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை வறட்சியான சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

பப்பாளி: பப்பாளி பழம் இருந்தால் அதனை நன்கு பேஸ்ட் செய்து வறட்சியான சருமத்தில் தடவி கொள்ளுங்கள். இதனை 15 முதல் 20 நிமிடம் வைத்திருந்து பின் கழுவலாம்.

கேரட்: கேரட்டை துருவி அதனை வறட்சியான சருமத்தில் தடவி கொள்ளுங்கள். இதனை 15 முதல் 20 நிமிடம் வைத்திருந்து பின் கழுவலாம்.

அவகேடோ: கனிந்த அவகேடோ பழத்தின் கூழ் பகுதியை ஒரு பௌலில் சேர்த்து அதனுடன் தயிர், தேன், தேங்காய் எண்ணெய் முறையே ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வைத்து கழுவுங்கள்.

கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு தயிர் சேர்த்து வறட்சி சருமத்தில் தடவி கொள்ளுங்கள். இது காய்ந்த பிறகு கழுவ வேண்டும்.

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தேன்: 1 டீஸ்பூன் அளவு ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

கோதுமை தவிடு மாஸ்க்: ஒரு சிறிய பாத்திரத்தில் 3 டீஸ்பூன் கோதுமை தவிடு சேர்த்து 1 டீஸ்பூன் முறையே பாதாம் பவுடர், தேன், தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து அந்த பேஸ்டை சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்