குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை எளிமையாக தெரிந்து கொள்வது எப்படி?
குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை எளிமையாக தெரிந்து கொள்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
அனைவரும் தினமும் அவர்களது குலதெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வருவது அவசியம். குலதெய்வத்தின் துணை நம்முடன் இருந்தால் எவ்வித பாதிப்பும் நம்மை நெருங்காது. அதனால் தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். தினசரி குலதெய்வ வழிபாடு செய்து வரும் நீங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்குள் இருந்தால் நீங்கள் எப்படி குலதெய்வம் வீட்டில் இருப்பதை அறியலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் குலதெய்வத்தின் அருள் வேண்டும் என்றால் முன்னோர்களின் வழிபாடு அவசியம். தினமும் சுத்தபத்தமாக குளித்து விட்டு முன்னோர்களின் படத்திற்கு முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். அவ்வாறு நமஸ்காரம் செய்யும் பொழுது உங்களுக்கு ஏதாவது அதிர்வு ஏற்படுவதை உணர்ந்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது.
பூஜை அறையில் பல்லிகள் நிச்சயம் இருக்க வேண்டும். நீங்கள் வழிபடும் பொழுது பல்லி சத்தமிட்டால் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறது. மேலும், உங்களுக்கு குலதெய்வ அருள் கிடைக்கப்போவதாக அர்த்தம். ஒரு சில குழந்தைகளை பார்க்கும் பொழுது நமது முன்னோர்களின் முக சாயல் அல்லது அவர்களது செயல்கள் போன்றே செய்வார்கள். அப்பொழுது நீ தாத்தா போன்று இருக்கிறாய், பாட்டி போன்று இருக்கிறாய் என்று நம்மை அறியாமல் கூறுவோம்.
இப்படி கூறும்பொழுது குலதெய்வம் வீட்டில் உள்ளது என்று அர்த்தம். அடுத்ததாக நீங்கள் காக்கைக்கு சாதம் வைக்கும் பழக்கமுடையவர்கள் எனில் இந்த விஷயத்தை கவனித்து பாருங்கள். காக்கை நீங்கள் வைத்த சாதத்தை உடனடியாக சாப்பிடாமல் உங்கள் வீட்டை சற்று நேரம் பார்த்து விட்டு சாப்பிட்டால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது என்று அர்த்தம்.