தொப்பை உங்களுக்கு பிரச்சனையா இருக்குதா? அப்ப இதை ஃபாலோ பண்ணுங்க!

Published by
லீனா

தொப்பை குறைவதற்கான வழிமுறைகள். 

இன்று பலரின் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுவது இந்தத்  தொப்பை தான். மிகவும் இளம் வயதிலேயே தொப்பை வைத்து வயதானவர்கள் போல் காட்சியளிக்கும் இவர் களுக்கு இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது அதனை சரிசெய்வதற்காக மருத்துவமுறைகளை கையாண்டு கெமிக்கல் கலந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால், பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் தொப்பையை குறைப்பதற்கான வழிகள் பற்றி பார்ப்போம்.

இஞ்சி சாறு

இஞ்சி சாறு உடலுக்கு மிகவும் ஏற்ற ஒன்று. இனி சாற்றை தேன் கலந்து இளம் சூட்டில், காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறைந்துவிடும்.

கிரீன் டீ

நம்மில் அநேகர் இன்று பால் தேநீரை விரும்பிப் குடிப்பதுண்டு. ஆனால், இவற்றால் நமக்கு எந்த பலனும் இல்லை. ஆனால் கிரீன்டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனை தினமும் குடித்து வந்தால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறைக்க உதவுகிறது. மேலும் இது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

தானியங்கள்

தானிய வகைகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் நாம் ஒரு தானிய வகையை நமது உணவில் சேர்த்து வந்தால் நமது உடலில் உள்ள நார்ச்சத்து, கேட்ட கொழுப்பை குறைத்து தொப்பை வளர்வதை தடுக்கிறது.

தூக்கம்

நம்மில் அதிகமானோர்,வேலைப் பளுவின் காரணமாக இரவு மிகவும் நேரம் சென்று தூங்கி, காலையில் மிகவும் நேரம் சென்று எழுகின்றனர். இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பெரிய விதத்தில் கெடுதல் ஏற்படுத்துகிறது. எனவே சரியான நேரத்தில் தூங்கி அதிகாலையில் நேரத்திற்கு எழும்போது,  நமது உடலில் வளர்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படாமல் சரியாக இருந்து தொப்பை வளர்வதை தடுக்கிறது.

தண்ணீர்

நாம் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியமானதோ, அதுபோல தண்ணீர் மிகவும் முக்கியமானது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் ஒரு லிட்டர் அளவு  குடித்து வந்தால் இரவு முழுவதும் வெறுமையாக இருந்த வயிற்றில், தங்கியிருக்கும் கழிவுகளை அகற்றி உடலில் கெட்ட கொழுப்புக்களை தங்க விடாமல் தொப்பை ஏற்படாமல் காக்கிறது.

Published by
லீனா

Recent Posts

“எங்கள் குல தெய்வம் அண்ணாமலை?” பாமக எம்எல்ஏ பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…

27 minutes ago

கோவா அணிக்கு தாவும் ஜெய்ஸ்வால்.., அதிர்ச்சியில் உறைந்த மும்பை கிரிக்கெட் சங்கம்.!

மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…

31 minutes ago

டிரம்ப் விதித்த புதிய வரி! பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை!

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…

1 hour ago

டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…

2 hours ago

“வெள்ளிவேல் திருட்டு இல்லை”.., இது தான் நடந்தது – இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்.!

கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…

2 hours ago

”இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…

4 hours ago