அடடே இப்படி ஒரு வரவேற்பா? அதிர்ந்து போன தமிழச்சி
ஜேசிபி இயந்திரம் மூலம் பிரச்சார வாகனத்தில் வந்த வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு.
மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிலையில், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில், சென்னை தெற்கு மாவட்ட பிரிதிநிதி குமரேசன் ஜேசிபி இயந்திரம் மூலம் பிரச்சார வாகனத்தில் வந்த வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தார். இவரது இந்த செயல் அங்குள்ளவர்களை வியந்து பார்க்க செய்தது.