ஐஎஸ் பயங்கரவாதி யாகோ ரீடிஜின் மூன்றாவது குழந்தையும் இறந்தது !!!!
- ஷமிமா பேகம் , கடிஜா சுல்தானா மற்றொரு மாணவி அமிரா அபாஸ். இவர்கள் மூன்று பேரும் லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் அகாடாமியில் படித்து வந்தனர்.
- இவர்கள் மூன்று பேரும் சிரியாவுக்குத் தப்பி சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தன. அப்போது இந்த செய்தி லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2015 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய மாணவிகள் தப்பி சென்று சிரியா ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர்.
அதில் (15)வயதான ஷமிமா பேகம் , கடிஜா சுல்தானா மற்றொரு மாணவி அமிரா அபாஸ். இவர்கள் மூன்று பேரும் லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் அகாடாமியில் படித்து வந்தனர்.
ஒரு நாள் தங்களது வீட்டில் வெளியே சென்று வருகிறோம் என கூறி விட்டு சென்ற இவர்கள் மூன்று பேரும் சிரியாவுக்குத் தப்பி சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தன. அப்போது இந்த செய்தி லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிரியாவின் அகதி முகாமில் இருக்கும் ஷமிமா பேகம் தான் நாடு திரும்ப வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.
கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த மூன்று வாரத்துக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.ஆனால் பிரிட்டிஷ் அரசு ஷமிமா பேகத்தின் குடியுரிமையை ரத்து செய்து விட்டது.
ஷமிமா கூறும்போது நான்கு வருடத்துக்கு முன் விருப்பப்பட்டு தான் ஐஎஸ் அமைப்பில் நாங்கள் சேர்ந்தோம்.
ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த 10 நாட்களில் இஸ்லாம் மதத்துக்கு மாறி இருந்த யாகோ ரீடிஜ் என்பவரைத் திருமணம் செய்தேன்.
அவருக்கு இப்போது 27 வயது. அவர் ஐஎஸ் அமைப்பில் போரிட்டு வந்தார். எங்களுடன் வந்த சுல்தானா குண்டு வீச்சில் உயிரிழந்து விட்டார்.
தனக்கு இரண்டு குழந்தை பிறந்தது. இரண்டுமே உடல் நலக்குறைவால் இறந்து விட்டன.இப்போது 39 ஆயிரம் பேர் உள்ள அகதி முகாமில் இருக்கிறேன்.
என் குழந்தையை இங்கு வளர்ப்பது கஷ்டம். இதை வளர்ப்பதற்காக நான் லண்டன் திரும்ப வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் ஷமிமா பேகத்துக்கு பிறந்த ஆண் குழந்தை வியாழக்கிழமை இறந்து விட்டது. நுரையீரல் நோய் காரணமாக குழந்தை இறந்து விட்டதாக சிரிய அரசுப் படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதை ஷமிமா குடும்ப வழக்கறிஞரும் உறுதி செய்துள்ளார்.