சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படமொன்றில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தை சொரியாவின் 2டி இன்டெர்த்தயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைக்கிறார்.
18 வருடங்களுக்கு பின்பதாக பாலாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள சூரியாவின் இந்த புதிய படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் கன்னியாகுமரியில் தொடங்கிய நிலையில், அடுத்ததாக மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஒன்றரை மாதம் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யா காது கேட்க முடியாத, வாய் பேசாத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இது வெறும் வதந்தி மட்டுமே, சூர்யா ஒற்றை கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…