ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே தனக்கு படத்தை இயக்கும் ஆர்வம் உள்ளதாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. பல ஆங்கில படங்களிலும் நடித்துள்ள இவர், சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை பெற்றார். தற்போது கொரோனா காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பல பிரபலங்கள்பல சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் வசித்து வரும் ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,
எதிர்காலத்தை குறித்து பயந்து இப்போது கிடைக்கும் இந்த தருணத்தை கழிக்காதீர்கள். நான் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம், எப்போதும் நான் எதிர்காலத்தை நினைத்து பயப்படாமல் இருப்பதால் தான் என்று கூறியுள்ளார். மேலும் எட்டு வருடங்களாக பிஸியாக நடித்து கொண்டிருந்த எனக்கு, இந்த கொரோனா ஊரடங்கில் ஓய்வு கிடைத்துள்ளதாகவும் , அதனை சரியாக செலவிடுவதாகவும் கூறியுள்ளார். ஆம் புத்தகங்கள் ஏராளம் படிப்பதாகவும், சில கதைகளை எழுதி வைத்துள்ளதாகவும், மேலும் சில கதைகளை எழுத தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்த ஊரடங்கில் தனக்கு புது புது எண்ணங்கள் தோன்றுவதாகவும், சினிமாவை விட்டு விலகி ஓட்டல் ஒன்றை தொடங்க எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கூட நான் இயக்கிய குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு பரிந்துரை செய்யப்பட்ட்டது என்றும், சமைக்க பிடிக்கும் என்பதால் தற்போது வித விதமாக சமைத்து வருவதாகவும், தனக்கு படங்கள் இயக்கும் ஆர்வம் உள்ளதாகவும் மனம் திறந்து பேசியுள்ளார். வரும் நாட்களில் இவரை சிறந்த இயக்குநராகவும் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…