போலியோவால் பாதிக்கப்பட்ட நிலையில், இரும்பு நுரையீரலை பயன்படுத்தி, 70 ஆண்டுகளாக வாழும் மனிதன்.
பால் அலெக்சாண்டர் என்பவர் ‘இரும்பு நுரையீரலின் நாயகன்’ என்று அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம் என்னவென்றால், 1952-ஆம் ஆண்டு முதல் அவரால் சொந்தமாக சுவாசிக்க இயலாமல் போனது. அவரது கழுத்திற்கு கீழ் அவரது அனைத்து உடல் உறுப்புகளும் முடங்கிப் போயுள்ளது. ஏன்னென்றால், இவர் ஆறாவது வயதில் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஐந்து நாட்களில் அவரது உடல் முழுமையும் செயலிழந்து போனது.
இதனால் பால் அலெக்சாண்டரால் நகரவோ, சுவாசிக்கவோ முடியாமல் போனது. இதனையடுத்து, பால் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் விரைவாகட்ரக்கியோஸ்டோமியை செய்வதற்கு முன்பு அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். ஆனால், அவர் இறக்கவில்லை. அவரது கழுத்திற்கு கீழ் உள்ள அனைத்து உறுப்புகளும் செயலிழந்து தான் போயிருந்தது.
பின்னர் அவருக்கு இரும்பு நுரையீரல் வைக்கப்பட்டு 18 மாதங்கள் கழித்து, மருத்துவமனையில் இருந்து, டெக்ஸாஸில், டல்லாஸில் உள்ள வீட்டிற்குச் சென்றார். இவர் ஒரு வீடியோவில் இதுகுறித்து கூறுகையில், மக்கள் என்னை விரும்ப வில்லை அவர்கள் என்னை சுற்றிலும் சங்கடமாக இருப்பதை போல உணர்ந்தேன். எல்லாரையும் போல், காலையில், எழுந்து பல் துலக்கி முகத்தை கழுவி மொட்டை அடித்து, காலை உணவு சாப்பிட்டேன். ஆனால் எனக்கு கொஞ்சம் உதவி தேவைப்பட்டது.
நான் எதாவது படிப்பேன், படம் வரைவேன். ஆனால், டிவி பார்ப்பதை வெறுத்தேன். பின் பள்ளி படிப்பை முடித்த பின், கல்லூரிக்கு செல்ல இயலாத நிலை இருந்தது. ஏனென்றால், போலியோ தடுப்பூசி இல்லை என்று அவரை கலோரியில் சேர்க்க மறுத்தனர். ஆனால், இரண்டு வருட முயற்சிக்கு பின், 2 நிபந்தனைகளின் அடிப்படையில் என்னை கல்லூரியில் சேர்த்தனர். ஒன்று, போலியோ தடுப்பூசி இருந்தது. இன்னொன்று, அவருக்கு அவரது உடன்பிறந்தவர்கள் தான் பொறுப்பு.
பால் கல்லூரி படிப்பை முடித்து, நம்பமுடியாத அளவிற்கு படித்து ஒரு வழக்கறிஞராக மாறினார். பின் அவர் மக்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டார். அதுமட்டுமில்லாமல், தனது வாயினாலேயே ஒரு புத்தகத்தை எழுதினார். பாலால் எதெல்லாம் செய்ய முடியாது என்று கருத்தினார்களோ அதையெல்லாம் அவர் செய்து காட்டினார்.
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…