வெளியாவதற்கு முன்பே வலிமை இத்தனை கோடிக்கு வியாபாரமா..??

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் அனைத்து உரிமைகளுக்கான வியாபாரங்களும் முடிந்து விட்டதாக தகவல்.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், ஒரு சண்டை காட்சி மட்டும் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாதம் இறுதிக்குள் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதற்கு முன்பே, தியேட்டர், ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து உரிமைகளுக்கான வியாபாரங்களும் முடிந்து விட்டதாகவும் மொத்தமாக 210 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் கார்த்திகேயா, அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். விரைவில் படத்திற்கான அப்டேட்கள் வரிசையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025