திரிஷாவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா சிம்பு.?

சிம்பு அவர்கள் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள போவதாக முன்னணி தளம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக திரிஷாவுடன் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு விமர்சனத்தையும் அள்ளி குவித்தது. இவரது திருமணம் குறித்து வழக்கமாக பல செய்திகள் வெளியாகும்.
இந்த நிலையில் தற்போது முன்னணி தளம் ஒன்று சிம்புவின் திருமணம் குறித்து வெளியிட்ட தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் பிலிம் ஃபேர் நிறுவனம், சிம்பு அவர்கள் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிம்பு அல்லது திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும். தற்போது இந்த செய்தி சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.