நடிகை சாயிஷா தான் கர்ப்பமாக இல்லை என்றும், யுவரத்னா படத்தின் படப்பிடிப்புக்காக எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் இவர் கர்ப்பமாக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு சமூக ஆர்வலர்கள் வழக்கமாக வேகமாக நடனமாடும் சாயிஷா கடந்த சில நாட்களாக மெதுவாக ஆடுவதாக கூறி வதந்திகளை பரப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது சாயிஷா, இது குறித்து கூறுகையில், தான் கர்ப்பமாக இல்லை என்று கூறியதோடு, ஊரடங்கு முடிவடைந்த பின்னர் யுவரத்னா படத்திலுள்ள பாடலின் பாடலுக்காக எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அதற்காக பயிற்சி பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் அமெரிக்கா மியூசிக் வீடியோ ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதிலிருந்து சாயிஷா கர்ப்பிணி என்று கூறியது வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…