நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பாண் இந்திய திரைப்படமான புஷ்பா ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விறு விறுப்பாக தொடங்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அடிக்கடி படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் பரவுவது வழக்கமான ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பிரபல நடிகையான சாய் பல்லவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். படத்தில் பழங்குடியின பெண்ணாக அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இதையும் படியுங்களேன்- மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க துடிக்கும் இசைஞானி.!
படத்தின் கதையில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘கார்கி’ என தொடர்ச்சியாக அருமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவிக்கு இந்த கதாபாத்திரமும் பேசப்படுவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …