ரூ.2,500-3,000 விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட் போன்?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 5ஜி ஸ்மார்ட் போனை ரூ.2,500 முதல் 3,000-க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் 5ஜி வரவுள்ள நிலையில், அதற்குள் பல நிறுவனங்கள் தனது 5ஜி ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுக்கொண்டே வருகிறது. அந்த ஸ்மார்ட் போன் ரூ.25,000-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், தனது புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட் போனை ரூ.5,000-க்கு கீழ் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்பொழுது அந்த ஸ்மார்ட் போன்கள் ரூ.2,500-3,000 விலைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானது. இந்தியாவில் முதல் முதலாக ஜியோ நிறுவனம், 4ஜி சேவையை இலவசமாக அறிமுகப்படுத்தியது. அதனை பலரும் உபயோகித்து வந்தனர். அந்த நேரத்தில் தான் அதற்கு போட்டியாக மற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை அதிரடி விலைக் குறைப்பில் வழங்கத் தொடங்கியது.
இதனால் பலரும் ஸ்மார்ட் போன்க்கு மாற தொடங்கினார்கள். அதன்பின் ஜியோ தனது 4ஜி போனை ரூ.1,500-க்கு வெளியிட்டது. அதனுடன் சில சலுகைகளையும் அறிவித்தது. தற்பொழுது பலரும் 5ஜி-யை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை கூகுள் மற்றும் ஜியோ இணைந்து தயாரிக்க உள்ளதாக அம்பானி அறிவித்துள்ளார்.
தற்பொழுது வரை 100 மில்லியன் ஜியோ போன்கள் விற்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் மற்றும் ஜியோ இணைந்து ஆண்ட்ராய்டு வசதியுடன் வலிமையான ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.