விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “விரலோடு உயிர்கூட கோர்த்து” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் விரைவில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது .
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா தனது விரலில் மோதிரம் அணிந்து கொண்டு விக்னேஷ் சிவன் நெஞ்சில் கையை வைத்துள்ளார். அந்த புகைப்படத்தின் மேல் “விரலோடு உயிர்கூட கோர்த்து” என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் நிச்சியதார்த்தம் முடிந்து விட்டது என்று கூறிவருகின்றார்கள்.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தரப்பில் தெரிவித்திருப்பது “நயன்தாரா கையில் அணிந்திருக்கும் மோதிரம் பழையது தான். நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இரண்டு மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இருவரும் கையில் பல படங்களை வைத்து இருப்பதால் இப்போதைக்கு திருமணம் குறித்த செய்தி எதுவும் இல்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…