ஓடிடியில் ரிலீஸாகிறதா ‘மூக்குத்தி அம்மன்’.? விளக்கமளித்த படக்குழுவினர்.!

Default Image

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய போவதாக வெளியான செய்தி வதந்தி என்றும், திரையரங்குகளில் தான் முதலில் மூக்குத்தி அம்மன் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது எல்கேஜி படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனரான என். ஜே. சரவணனுடன் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றுகிறார் ஆர். ஜே. பாலாஜி . நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரும், வில்லனாக விசாரணை படத்தில் நடித்த அஜய் கோஷூம் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

தற்போது ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக பல பிரபலங்களின் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் வகையில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து படக்குழுவினர் தற்போது விளக்கமளித்துள்ளனர். அதில் மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும், தியேட்டர்கள் திறந்தவுடன் மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸாகும் என்றும், தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் படத்தை சென்சாருக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதிலிருந்து மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படாது என்பது உறுதியாகியுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TVK -AmitShah
annamalai about vijay
AFG vs ENG - Champions Trophy 2025
TVK Leader Vijay speech at TVK First Anniversary Function
TVK - DMK -BJP
TVKVijay - adhavarjuna
MS Dhoni - TVK Leader Vijay - Prashant kishor