லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா உலகநாயகன்.? அப்போ ‘தலைவர்169’..?

Default Image

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். சிறிய பட்ஜெட்டில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுப்பவர். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க போவதாகவும், ‘தலைவர்169’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி லோகேஷ் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்சரண் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் அதனை மைத்ரி மூவீ மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் தயாரிப்பில் இரண்டு படங்களை இயக்கவுள்ளதாகவும், அதில் ஒன்று ரஜினி அவர்கள் நடிப்பதாகவும், மற்றொரு படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கமல் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்