தயாரிப்பாளராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்.? அவரே கூறிய பதில்.!
கீர்த்தி சுரேஷ் வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்திலும், நித்தீன் சத்யாவின் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனையடுத்து ‘குட் லக் சகி’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார்.அதனையடுத்து இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘ராக்கி’, இயக்குநர் செல்வராகவனுடன் ‘சாணிக் காயிதம்’ படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆம் திரில்லர் நிறைந்த ஒரு வெப் சீரிஸை கேட்டதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்து போக அவரே தயாரித்து நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதற்கு கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஆகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கீர்த்தி சுரேஷின் தந்தையான சுரேஷ் குமார் மலையாளத்தில் பல படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.