ஜோபிடனுக்கு கொரோனாத் தொற்று???
அமெரிக்காவில் நவ.,3 தேதி ஜனாதிபதி தேர்தலில் நடைபெறுகிறது.குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் 2வது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
கடந்த அக்.,1ந்தேதி அதிபர் டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு ராணுவ மருவத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் தொற்றில் இருந்து அவர் முழுமையாக மீண்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்த நிலையில் ட்ரம்ப் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதேபோல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வருகின்ற ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் பயணம் செய்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த விமானத்தில் ஜோ பிடனனும் பயணம் செய்துள்ளார்.இதனால் தொற்று பாதித்த அந்நபரிடம் இருந்து ஜோ பிடனுக்கும் வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது? என்ற அச்சம் எழுந்தது.
இதையடுத்து ஜோ பிடனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக அவரது தனது பிரச்சாரக் குழுவின் மேலாளர் ஜென் டில்லேன் மூலம் தகவல் தெரிவித்தார்.
மேலும் பிரச்சாரக் குழுவின் மேலாளர் ஜென் டில்லேன் கூறுகையில் ஜோ பிடனை தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அவரது மருத்துவர்கள் கூறியதாக குறிப்பிடார்.
ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், தனது பிரச்சார குழுவைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 3 நாட்களுக்கு தனது பிரச்சார பயணத்தை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.