ஆண்மைக்குறைவு ஜிம்முக்கு போவதால் ஏற்படுமா? வாருங்கள் அறியலாம்!

Published by
Rebekal

ஜிம்முக்கு போவதால் ஆண்மைக்குறைவு ஏற்படாது, மாறாக உடலுக்கு நன்மையை தான் தரும்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என இருவருமே உழைக்கின்றனர். அது போல இருவரும் தங்கள் உடலையும் மனதையும் தங்களுக்கு பிடித்தாற்போல வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். உடம்பை ஏற்றுவதற்கு சரி குறைப்பதற்கும் சரி ஜிம்முக்கு செல்வதுதான் தீர்வு என தற்போதைய காலத்தில் உள்ள இளைஞர்களின் மனதில் பதிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஜிம்முக்கு சென்று உடலழகை வளர்த்து ஆணழகனாக வலம் வரவேண்டும் என்ற ஆசையும் அதிகரித்துவிட்டது. இதனால் தினமும் ஜிம்முக்கு சென்று தங்களால் முடிந்த அளவு முழு முயற்சி போட்டு உடலை கட்டுக்கோப்பாகவும் கவர்ச்சிகரமாகவும் மாற்றுவதற்கு பல முயற்சிகளை செய்கின்றனர்.

ஜிம்முக்கு செல்லும் பொழுது உடலை வளர்க்க வேண்டுமானால் புரோட்டின் பவுடர் என்ற ஒரு பவுடரையும் அதிகளவில் உபயோகிக்கின்றனர். மேலும் அதிக எடை கொண்ட பொருட்களையும் தூங்குகின்றனர். எனவே இந்த பவுடர் காரணமாகவும் அந்த எடை காரணமாகவும் நரம்புகள் பாதிக்கப்பட்டு ஆண்மை குறைவு ஏற்படும் என பலராலும் கூறப்படுகிறது. மேலும் ஜிம்முக்கு சென்று தங்களது உடலை வளர்த்துள்ள ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால் இவன் ஜிம்முக்கு செல்வதால் தான் உனக்கு குழந்தை இல்லை என்று பெயர் வந்து விடுகிறது. காரணம் அதுவாகத்தான் இருக்குமோ நாம் ஜிம்முக்கு செல்வதால் தான் நமக்கு உடல் பாதிக்கப்பட்டு நமக்கு குழந்தை இல்லையோ என்று பலரும் குழம்பிப் போய் இருக்கின்றனர். ஆனால் அது உண்மையை கிடையாது.

ஏனென்றால், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஜிம் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் மகிழ்ச்சி வாழ்க்கையில் வேண்டும் என நினைத்து ஜிம்முக்கு செல்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய மகிழ்ச்சியை அடைகின்றனர். மேலும், மன சோர்வு நீங்கி நரம்பு மற்றும் ரத்த ஓட்டம் நன்கு வேலை செய்யும் எனவும் அவர்களது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின்மை பிரச்சனை இதனால்தான் ஏற்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறுகின்றனர். ஏனென்றால் ஆண்மைக்குறைவு பிரச்சினை உள்ளவர்கள் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் ஆண்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வலுவிழந்த நரம்புகள் வலுப்பெற்று மனம் புத்துணர்ச்சி பெற்று மன தைரியம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து கூறிய ஒரு உடற்பயிற்சி நிபுணர் ஒருவர், பழங்காலங்களில் ஆணழகன் என்றாலே  கட்டுக்கோப்பாக உடலை வைத்திருப்பவனை தான் கூறுகின்றனர். தற்பொழுது வரையும் அதுதான் உண்மையாக இருக்கிறது. ஆணழகன் என்றால் என்ன? ஆண்மை அதிகரித்திருப்பதால் தான் ஆணழகன் என கூறுகிறார்கள். எனவே நிச்சயம் இதனால் ஆண்மை குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை என அவர் கூறியுள்ளார். மேலும் புரோட்டின் பவுடர் உபயோகிப்பதால் ஆண்மை குறையும் என்றால், அந்த பவர் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா என கணக்கெடுக்கும் போது நிச்சயமில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கத் தான் செய்கிறது.

ஆண்மை குறையும் என்றால் எப்படி அந்த புரோட்டீன் பவுடரை வாங்குவார்கள்? சிலருக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை வைத்து அனைவருமே இதனால்தான் பாதிக்கப்படுகின்றனர் என்று முட்டுக்கட்டை போடுவது தவறு எனவும் அவர் கூறுகிறார். எனவே முடிந்த அளவு எடை தூக்கி முயற்சியை கைவிடாது போராடும் பொழுது ஒவ்வொரு ஆண்மகனும் ஆணழகனாக வரலாம் ஆண்மை குறைவு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

தூத்துக்குடியை அடுத்து மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்! அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

தூத்துக்குடியை அடுத்து மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்! அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…

8 minutes ago

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…

1 hour ago

LIVE: பரந்தூர் செல்லும் விஜய் முதல்… நூல்களை வெளியிடும் முதலமைச்சர் வரை.!

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்… காவல்துறை அனுமதி!

சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…

2 hours ago

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…

2 hours ago

ஹமாஸுடன் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.! எப்போது அமல்?

இஸ்ரேல்:  ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…

3 hours ago