அதிகமா டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்சனை உள்ளதா ?
அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டீ குடிப்பதற்கு அடிமையாக தான் உள்ளனர். பலரும் டீயை மட்டும் குடித்து தனது பசியை போக்கி கொள்வதுண்டு. ஆனால், இவ்வாறு நாம் குடிப்பது நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.
ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் டீ குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.
நாம் அருந்தும் டீயில் காஃபைன் என்ற ஒரு பொருள் உள்ளது. டீயை நாம் அதிகமாக குடிக்கும் போது, இந்த பொருள் நமது குடலிலேயே தங்கி, மன அமைதியை கெடுக்கிறது. உடலுக்கு இரும்புசத்து மிக அவசியம். ஆனால், டீயில் உள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள், நமது உடல் இரும்புச்சத்தினை உறிஞ்சுவதையே தடுத்து விடுகிறது.
சில பேர் தங்களது காலை கடனை முடிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக டீ குடித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பார். ஆனால், இவ்வாறு டீயை அதிகமாக குடித்து வந்தால், அது மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு டீ குடிக்கும் பட்சத்தில், இது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூட வழிவகுக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் எதற்காகவாவது மருந்து குடித்தால், அது மருந்து (அல்லது) மாத்திரையின் வீரியத்தை போக்கி விடும்.
நாம் டீயை குடிக்கும் போது அதிக சூட்டோடு குடித்தால், இது நமது உணவு குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கிறது எனவே, அதிக சூட்டோடு டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.