கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு மாத்திரை மருந்தாகிறதா? – சீன மருத்துவர்கள்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு மாத்திரை மருந்தாகிறதா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெட்ஃபோர்மின் என்ற மாத்திரையை மருந்தாக பயன்படுத்தலாம் என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாத்திரை பொதுவாக, நீரிழிவு மருந்து மார்பக புற்றுநோய் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக, இந்த மாத்திரை டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது.
வுஹானில் உள்ள சில மருத்துவர்களால் பொதுவான நீரிழிவு மருந்து ஒரு ‘அதிசய மருந்து’ என்று பாராட்டப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நீரிழிவு நோய்க்கு மெட்ஃபோர்மின் எடுக்கும் COVID-19 நோயாளிகளில் இறப்பு விகிதம் மருந்து எடுத்துக் கொள்ளாத நீரிழிவு நோயாளிகளை விட மிகக் குறைவு என வுஹானில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் COVID-19 சிகிச்சையில் பயன்படுத்த டெக்ஸாமெதாசோன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தியாவில் மிதமான மற்றும் கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அழற்சி எதிர்ப்பு மருந்தைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் அனுமதித்துள்ளது. மோசமான உடல்நலக்குறைவான நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் பயன்படுத்தவும் உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்துள்ளது.