நிரந்தர நோயாக மாறுகிறதா கொரோனா….? ஆராய்ச்சியாளர்களின் கருத்து என்ன…?

Published by
லீனா

கொரோனா பெருந்தொற்று என்ற நிலையில், நிரந்தர நோயாக மாறும். ஆனாலும், மக்கள் விழிப்புடன் செயல்பட்டால், அச்சப்பட தேவையில்லை.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிக்க முடியவில்லை என்றாலும், இதனை தடுப்பதற்கான பல்வேறு  நடவடிக்கைகளை ஒவ்வொரு நாட்டு அரசும் மேற்கொண்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், இந்த வைரஸ் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு தடுப்பு மைய (CDP) ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, தற்போது pandamic (பெருந்தொற்று)-ஆக இருக்கும் இந்த வைரஸ் Endemic- ஆக மாறும் என கூறுகின்றனர். Endemic என்பது, அழிக்கவே முடியாமல், வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே தொடர்ந்தால் அது Endemic என்று அழைக்கப்படுகிறது.

 இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும், மீண்டும் குறிப்பிட்ட நாடுகளில் தோன்றும் என கூறப்படுகிறது. அதாவது, இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதுமே பரவி விட்டது. இதனை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். முழுவதும் அழிக்க முடியாது. ஏனென்றால், உலகம் முழுவதும் 100% மக்களுக்கு தடுப்பூசி கொடுக்க வேண்டும். அது சாத்தியமில்லாத ஒன்று. மேலும், இந்த வைரஸ் உருமாறி கொண்டே  இருப்பதால், இதனை அழிக்க முடியாது.

தடுப்பூசியை பொறுத்தவரையில், ஒருவர் அதை போட்டுக் கொண்டால், அதன் செயல்திறன் குறிப்பிட்ட காலங்களுக்கு தான் இருக்கும். 2 வருடங்களுக்கு பின் மறுபடியும் இந்த தொற்று பரவும் போது, தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்படும் என கூறுகின்றனர். சில நாடுகளில்  கொரோனா இல்லை, எனவே யாரும் மாஸ்க் அணிய வேண்டாம். அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்றாலும், வெளி நாட்டில் வந்த ஒவருக்கு கொரோனா தொற்று இருந்தால்,  மீண்டும், மீண்டும் இந்த தொற்று பரவலாம்.

இதற்கு முடிவு என்னவென்றால், கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும். கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என்று இல்லாமல், நமது நாட்டில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா பரவலாம் என்ற அவசர நிலையோடு அரசுகள் செயல்பட வேண்டும். எப்போதுமே, மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள் பற்றாகுறை இல்லாமல், எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். தடுப்பூசிகள் எப்போதுமே போடப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எனவே, கொரோனா பெருந்தொற்று என்ற நிலையில் இருந்து, நிரந்தர நோயாக மாறும். ஆனாலும், மக்கள் விழிப்புடன் செயல்பட்டால், அச்சப்பட தேவையில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…

6 hours ago

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

6 hours ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

7 hours ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

7 hours ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

8 hours ago

H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…

8 hours ago