பிக்பாஸ் – 4 ல் கலந்து கொள்ள போகிறாரா பிகில் பட சிங்கபெண்.! ட்வீட் செய்து விளக்கம்.!

பிக்பாஸ் சீசன் 4 ல் பிகில் பட பிரபலமான அமிர்தா ஐயர் கலந்து கொள்ள போவதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. சமீபத்தில் கூட உலகநாயகன் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலானது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. நேற்றைய தினம் உலகநாயகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸில் தோன்றும் சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் வில்லன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை கிரண் ரத்தோட் மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் அவர்களும் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பிகில் படத்தில் கால்பந்து வீரராக நடித்த அமிர்தா ஐயர் கலந்து கொள்ள போவதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதற்கு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏன் அனைவரும் எனது பெயரை பிக்பாஸ் லிஸ்ட்டில் சேர்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதிலிருந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது. . தற்போது அமிர்தா ஐயர் கவினுடன் லிப்ட் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
#AmrithaAiyer : “Why are random people adding my name in the big boss list ????” pic.twitter.com/DW07sKadFB
— Amritha Aiyer – Thendral (@Amritha_Aiyer) September 5, 2020