பென்சில்வேனியாவில் 99 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவு.. அதிபராகப்போகிறாரா பைடன்?
பென்சில்வேனியா மாகாணத்தில் 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் முன்னிலையில் நிறைவுபெற்றது.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 264 சபை வாக்குகள் பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும், வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்துமாறு ஜார்ஜியா உள்ளிட்ட மூன்று மாகாணங்களின் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்தது. மேலும் ஜார்ஜியா அரசு, வாக்குகளை எண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்துவந்தது.
முதற்கட்டத்தில் டிரம்ப் முன்னிலை வகித்த நிலையில், தற்போதைய நிலவரப்படி 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஏற்கனவே பைடன், 264 சபை வாக்குகளை பெற்று பைடன் வெற்றிபெறுவது உறுதியான நிலையில், இந்த பென்சில்வேனியா மாகாணத்தில் வெற்றிபெற்றால் அதிபராவது உறுதி என கூறப்படுகிறது.