அனுஷ்கா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அனுஷ்கா. இவர் விஜய், அஜித்குமார், ரஜினி உள்ளிட்ட பல பிரபல ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். ஆனால் அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டது.
ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை அதிகரித்து குண்டாக நடித்திருப்பார். ஆனால் தற்போது வரை அவரால் உடல் எடையை குறைக்க இயலவில்லை என்று தான் கூற வேண்டும். அதனால் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் குறைய துவங்கியது. அனைவரும் அவரது உடல் எடையை வைத்து கேலி கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது. எனவே தற்போது அனுஷ்கா திரைத்துறையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட வாய்ப்புகள் குறைந்ததற்காக மட்டுமில்லாமல் திருமணம் நடக்காத விரக்தியில் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும். ஆனாலும் இந்த செய்தி அனுஷ்கா ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…