பிரபல கிரிக்கெட் வீரரை மணக்கிறாரா நடிகை அனுபமா பரமேஸ்வரன்.? இன்ஸ்டா பதிவால் வைரலாகும் தகவல்.!

Default Image

பிரபல கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து தனுஷூடன் கொடி படத்தில் நடித்தார் . அதன் பின் தமிழில் மட்டுமின்றி மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ‘happy holiday to me’ என்ற கேப்ஷன் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருவதுடன் சில செய்திகளும் உலா வருகிறது.சமீப காலமாக அனுபமா பரமேஸ்வரன் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கு விடுப்பு தர கோரி பும்ரா பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்ததும் , அவர்கள் இவரது விடுப்புக்கு ஒப்புதல் அளித்தும் உள்ளனர் .பும்ரா விடுத்த அதே நேரத்தில் அனுபமா பரமேஸ்வரன் இந்த பதிவை பகிர்ந்துள்ளதை தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மை என்றும் , விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும், திருமணம் செய்ய உள்ள காரணத்தால் தான் பும்ரா விடுப்பு கேட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் உலா வருகிறது .ஆனால் இதுகுறித்து இதுவரை பும்ரா மற்றும் அனுபமா தரப்பிலிருந்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks
Tamil Nadu Police Recruitment
gold price
tvk police