முகப்பருக்கள் அதிகம் இருக்கிறதா? கடலை மாவுடன் இதை கலந்தால் போதும்!
முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு வெளியில்செல்வதற்கான ஒரு தன்னம்பிக்கையே வராது. இந்நிலையில் பருக்களை போக்குவதற்கான வழிகள் தேடி செயற்கை முறையில் கண்டுபிடிக்கப்பட்ட முகப் பூச்சுகள் மற்றும் கிரீம்களை உபயோகித்து அதன் மூலம் அதிகமான பிரச்சனைகள் தான் இழுத்து வைப்பவர்கள். ஆனால், இயற்கை கொடுத்துள்ள பொருட்கள் மூலமாகவே நம்முடைய முகத்தில் உள்ள பருக்களை நீக்கி முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்க செய்யலாம். அதற்கு எதுவும் தேவையில்லை கடலை மாவு மட்டும் போதும்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் சாறு.
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் கடலைமாவை எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு கடலை மாவு நன்றாக தோசை மாவு பதத்திற்கு வரும் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவேண்டும். கிளறிய பின்பு அதை முகத்தை கழுவிவிட்டு ஈரப்பதமான நம்முடைய முகத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் நிச்சயமாக முகத்தில் உள்ள பருக்கள் குறைந்து முகம் பொலிவு பெறும். அதன் பின்பும் அதிகமாக பரு இருப்பவர்கள் தொடர்ந்து 3 வாரத்துக்கு உபயோகித்து வர முகபருக்கள் அழிந்து முகத்தில் உள்ள தழும்புகள் குறைய ஆரம்பிக்கும். இதற்கு நாம் அதிக விலை கொடுத்து க்ரீம்களை வாங்கி உபயோகிக்க தேவையில்லை, எளிய இயற்கை முறையாகிய இதை உபயோகித்துப் பாருங்கள்.