கண் பிரச்சனை தீர்க்கும் ‘இரு கங்கை குடி’ மாரியம்ம்மன் கோவில் தல வரலாறு!

Default Image

அர்ஜுனனின் ஆறும் வைப்பாறு ஆறும் ஓடும் பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளது இருக்கன்குடி மாரியம்மன் ஆலையம். 

இரு ஆறுகளும் கங்கையாக கருதப்படுவதால் ‘இரு கங்கை குடி’ என்றே கூறப்பட்டு வந்தது. அது மருவி இருக்கன்குடி என பெயர் வந்தது.  

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் கடந்து வந்த கரடு முரடான பாதையில் மகாலிங்க மலை அடிவாரத்தை அடைந்தனர். அப்போது, உடனிருந்தவர்கள் களைப்பால் நீராட வேண்டும் என நினைத்தார்கள். ஆனால், அங்கு நீரோடை நதிகள் எதுவும் இல்லை. அதனால் அர்ஜுனன் பூமி மாதாவையும் , கங்கை தேவியையும் வணங்கி பூமியில் அம்பை எழுதினான். அதனால் உருவாக்கப்பட்ட ஆறுதான் அர்ஜுன் ஆறு. இந்த ஆறு இருக்கன்குடியின் இருந்து தெற்கில் உள்ளது.

அதேபோல ராமபிரான் ராவணனை வதம் செய்வதற்காக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தன் சேனையுடன் வந்து கொண்டிருக்கும்போது அவர்கள் இளைப்பாற  நதி உள்ளதா என தேடினர். அப்போது அகத்திய முனிவர் உலகில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் ஒரு குடத்தில் சேமித்து அதனை ஒரு இடத்தில் புதைத்து வைத்திருப்பதாக தகவல் அறிந்து இதனை ராமன் ராமபிரான் தனது ஞானதிருஷ்டியால் கண்டுபிடித்தான். அதனை நோக்கி அம்பினை எய்தினான்.

அப்போது தான் வைப்பாறு எனும் ஆறு உருவானது. வைப்பு என்றால் புதையல் என்று அர்த்தம். அதன் காரணமாகத்தான் வைப்பாறு என பெயர் பிறந்தது. அர்ஜுனன், ராமனால் இந்த இரண்டு ஆறுகளும் உருவாக்கப்பட்டதால் இவ்விரு ஆறுகளும் கங்கைக்கு நிகரான புண்ணியத்தை இந்த ஆறுகள் பெற்றுள்ளன. அதனால்தான் இந்த ஊருக்கு இரு கங்கை குடி என இருந்தது. அந்த பெயர் தான் காலப்போக்கில் மருவி இருக்கன்குடி என்றானது.

அம்பாளை தரிசிக்க வேண்டி ஒரு முனிவர் நீண்டகாலமாக தவத்தில் இருந்தார். அந்த தளத்திற்கு பலனாக ஒரு குரல் கேட்டது அர்ஜுனன் ஆற்றுக்கும் வைப்பாறு ஆற்றுக்கும் இடையே உள்ள மேடை பகுதிக்கு வருமாறு அந்த அசரீரி ஒலித்தது. அதனை அடுத்து முனிவரும் அப்பகுதிக்கு சென்று வந்தார். அப்போது அம்பாள் முனிவருக்கு காட்சியளித்தாள். தான் கண்ட உருவத்தை சிலையாக செய்து வழிபட்டுவந்தார் முனிவர்.

இயற்கை சீற்றத்தினால் அந்த சிலை ஆற்று மண்ணில் புதைந்தது. அந்த இடத்திற்கு ஒரு சிறுமி தினந்தோறும் சாணம் சேகரிக்க வருவாள். அவள் ஒருநாள் ஒரு இடத்தில்இருந்து சாண கூடையை தூக்க முடியவில்லை என ஊர் மக்களின் உதவியை நாடினாள். அப்போது தூக்கப்பட்ட இடத்தின் அடியில் ஊர்மக்களுக்கு அம்பாள் காட்சியளித்தாள். இவ்வாறு இருக்கன்குடி மாரியம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டு அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறாள் இருக்கன்குடி மாரியம்மன் ஆலையம்.

கண் பிரச்சனை உள்ளவர்கள் இந்த அம்பாளை தரிசனம் செய்தால் கண் நோய் தீரும் என்பது நம்பிக்கை. உடல்நலம் பேணும் இந்த அம்மனை தரிசித்து தங்கள் உடல்நலத்தை காத்து கொள்ளலாம்.

மதுரையிலிருந்து 73 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த இருக்கன்குடி. சாத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் சென்றாலும் இருகன்குடியை அடைந்துவிடலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

India beat Bangladesh
India Women Won
ENGWvsBANW
Australia Womens Won the match
AIRTEL JIO BSNL
Tamilnadu CM MK Stalin talk about Samsung workers protest