இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அயர்லாந்து பிரதமர்! தன் சொந்த ஊருக்கு வருகை புரிந்தார்!
- மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அசோக் வராட்கர் 1960 முதலே அயர்லாந்தில் குடியேறினார்.
- அவரது மகன் லியோ வராட்கர் தான் தற்போது அயர்லாந்தின் பிரதமராக இருக்கிறார்.
மஹாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்தில் உள்ள வாரட் எனும் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசித்த மருத்துவரான அசோக் வராட்கர், 1960ஆம் ஆண்டு அயர்லாந்தில் குடியேறினார்.
அதன் பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்ரது மகன் லியோ வராட்கர்-தான் அயர்லாந்தின் பிரதமர் ஆவார். அவர் அண்மையில் தனது தந்தையின் சொந்த ஊரான மஹாராஷ்டிராவில் உள்ள வராட் கிராமத்திற்கு வந்துள்ளார். மேலும் அங்குள்ள கோவில் சென்று வழிபட்டுள்ளார். பின்னர் அவர் கூறுகையில், தந்தையின் சொந்த ஊருக்கு வெகுநாட்களுக்கு பிறகு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. என தெரிவித்தார்.