ஒரு பெரிய நிறுவனத்தின் பெட்ரோல் பங்கிற்க்கே சீல் வைத்த சின்ன எலி!
சமூக வலைதளத்தால் தற்போது உலகம் முழுவதும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சிலருக்கு சின்ன தவறு பெரிதான விளைவுகளை ஏற்படுத்தி அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
அப்படி ஒரு நிகழ்வு அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது. அந்நாட்டில் உள்ள பிரபலமான பெட்ரோல் பங்க் நிறுவனம் ஆப்பிள் க்ரீன் ஆகும். இந்நிறுவனம் பல நாடுகளில் தனது கிளையை பரப்பியுள்ளது.
அப்படி இருக்கையில் அயர்லாந்தில் குறிப்பிட்ட இடத்தில ஒரு பெட்ரோல் பங்கும் அதன் இணைப்பாக ஹோட்டலும் இருந்து வந்துள்ளது. அந்த ஹோட்டலில் சமயலறையில் உள்ள ப்ரெட் பாக்கெட்டில் ஒரு எலி துள்ளிக்குதித்து ஓடியுள்ளது. இதனை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து இனையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இது சமூக வலைத்தளத்தில் பரவி நெட்டிசங்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பங்கை அந்நிறுவனம் மூடிவிட்டது.