palestine - israel [file image]
சென்னை: ஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த போர் இன்னும் ஓயவில்லை. ஹமாஸ் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடு அங்கீகாரம் செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அயர்லாந்து, நார்வே நாடுகளுக்கான தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது இஸ்ரேல். ஆனால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு அமைதியை உறுதி செய்வதற்கு இந்த மூன்று நாடுகளும் இந்த நடவடிக்கை அவசியமானதாகக் கருதுகின்றன.
இதுவரை இஸ்ரேலுக்குள் ஹமாஸ் தாக்குதலின் போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 250 பேர் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்னர் என்றும், அவர்களில் 120 பேர் காஸாவில் உள்ளனர். அதே நேரத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் போது 35,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், கிட்டத்தட்ட 80,000 பேர் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. இதற்கு கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராகச் சேர்ப்பது குறித்த அறிக்கை மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில், 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவளித்தன. ஆனால், இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெரும்பான்மை ஆதரவின் காரணமாக பாலஸ்தீனம் ஐ.நா சபையில் முழு நேர உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…