பதவியேற்ற ஒரு மாதத்தில் ராஜினாமா செய்த ஈராக் பிரதமர்..!

Default Image

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்ததால் போராட்டத்தை ஒடுக்க போலீசார் மற்றும் ராணுவ வீரர்களால் சுமார் 400 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் பதவியை அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார். அதன் பிறகு கடந்த மாதம் அதிபர் பர்ஹாம் சாலி புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்புத்துறை மந்திரி முகமது தவுபிக் அலாவியை நியமித்தார்.

இதையெடுத்து முகமது தவுபிக் அலாவியை பிரதமராக நியமித்ததற்கு எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைக்க நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது.

ஆனால் போதுமான ஆதரவு கிடைக்காததால் முகமது தவுபிக் அலாவி பதவி விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்