ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இருப்பிடங்களுக்கு எதிராக தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஈராக் பாதுகாப்பு படையினர் 14 பேரை சில நாட்களுக்கு முன்னர் ஈராக் ராணுவம் கைது செய்தனர்.
அவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் பலர் தற்போது ஜாமீனில் வெளியே விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ஈராக் அதிகாரிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனராம். அதாவது, ஒரு சிலர் அதிகாரிகள் 14 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சில அதிகாரிகள் 14 பேரில் ஒருவரை தவிர மற்ற 13 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனராம்.
மேலும், இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து ஈராக் இராணுவம், உள்துறை அமைச்சகம் மற்றும் ஈராக் பாதுகாப்பு படையினர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா, ஈராக் மீது குற்றம் சாட்டி வருகிறது. அதாவது, அமெரிக்க தூதரகத்தின் மீதான தீவிரவாத சதி வேலைகளின் பின்னால் ஈராக் ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. குற்றவாளிகளை இதுவரை அடையாளம் கண்டு ஈராக் ராணுவம் கைது செய்யவில்லை எனவும் ஈராக் அரசாங்கத்தை விமர்சித்து வருகிறது.
ஆனால், அமெரிக்க தூதரகம் மீதான தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையானது ஈராக் நாட்டில் உள்ள தீவிரவாதத்திற்கு எதிரான சட்டத்தின்படியே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என ஈராக் உளவுத்துறை புலனாய்வு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…