அமெரிக்காவை குறிவைத்ததாக சந்தேக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவித்த ஈராக்.!

Default Image

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இருப்பிடங்களுக்கு எதிராக தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஈராக் பாதுகாப்பு படையினர் 14 பேரை சில நாட்களுக்கு முன்னர் ஈராக் ராணுவம் கைது செய்தனர்.

அவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் பலர் தற்போது ஜாமீனில் வெளியே விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ஈராக் அதிகாரிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனராம். அதாவது, ஒரு சிலர் அதிகாரிகள் 14 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சில அதிகாரிகள் 14 பேரில் ஒருவரை தவிர மற்ற 13 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனராம்.

மேலும், இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து ஈராக் இராணுவம், உள்துறை அமைச்சகம் மற்றும் ஈராக் பாதுகாப்பு படையினர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா, ஈராக் மீது குற்றம் சாட்டி வருகிறது. அதாவது, அமெரிக்க தூதரகத்தின் மீதான தீவிரவாத சதி வேலைகளின் பின்னால் ஈராக் ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. குற்றவாளிகளை இதுவரை அடையாளம் கண்டு ஈராக் ராணுவம் கைது செய்யவில்லை எனவும் ஈராக் அரசாங்கத்தை விமர்சித்து வருகிறது.

ஆனால், அமெரிக்க தூதரகம் மீதான தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையானது ஈராக் நாட்டில் உள்ள தீவிரவாதத்திற்கு எதிரான சட்டத்தின்படியே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என ஈராக் உளவுத்துறை புலனாய்வு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்