அதிபர் மறைவு: ஈரானில் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல்?

presidential election

சென்னை: ஈரானில் ஜூன் 28-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியகியுள்ளது. அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்காலிக அதிபராக முகமது முக்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், முதல் துணை ஜனாதிபதி பதவி ஏற்பார். மேலும், அது 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார் என்று Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு தகவலின்படி, மே 30 முதல் ஜூன் 3 வரை வேட்பாளர்கள் பதிவு செய்யப்படும் எனவும், அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் ஜூன் 12 முதல் 27 வரை தேர்தல் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஈரானில் அதிபர் தேர்தல் 2025-ல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போதைய அதிபர் ரைசியின் மரணத்தைத் தொடர்ந்து தேர்தல் முன்னதாகவே நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்