ஈரான் அணு விஞ்ஞானி கொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் – ஆயுதப்படை தலைவர்!

ஈரான் நாட்டு அணு விஞ்ஞானி மொஹ்சன் அவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டின் ஆயுதப்படை தலைவர் கூறியுள்ளார்.
ஈரானின் பிரபலமான அணு விஞ்ஞானி மொஹ்சன் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையில் இஸ்ரவேலுக்கு தொடர்பு இருப்பதாக ஈரான் நாட்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை வடிவமைத்த இந்த விஞ்ஞானியின் இழப்பு தங்களுக்கு மிக பெரியது என அந்நாட்டின் முக்கியமான தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இதுவரை இந்த சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை எனவும் இஸ்ரவேலுக்கு அதிக தொடர்பு இருப்பதாகவும் ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் அவர்கள் கூறியிருந்தார். இருப்பினும், இஸ்ரேல் பிரதமர் இது குறித்த கருத்து எதுவும் இன்னும் சொல்லாமல் இருப்பது அவர்களுக்கு மென்மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் அணு விஞ்ஞானி மொஹசன் அவர்களின் கொலைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டின் ஆயுதப்படை தலைவர் ஒருவரும் தற்பொழுது கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025