ஈரான் நாட்டை சார்ந்த சில மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்து விமானம் மூலம் ஈரான் அழைத்து வரப்பட்டார்கள்.அழைத்து வரப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து பரிசோதனை செய்த பின்னர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் ஈரானில் உள்ள ஹிய்ம் நகரில் கொரோனா வைரசால் 5 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் கொரோனா வைரசால் 2 பேர் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம்தேதி உயிரிழந்தனர்.
இதையெடுத்து நேற்று மேலும் 2 பேர் இறந்ததாக ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதனால் ஈரானில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2300 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்தாலும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…